சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 10) சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.45,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தங்கத்தின் திடீர் விலையேற்றம் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.45,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.30 அதிகரித்து ரூ.5,645-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை உயர்ந்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.800 அதிகரித்து ரூ.77,000-க்கும் ஒரு கிராம் 80 காசுகள் அதிகரித்து ரூ.77-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
ICC WorldCup: அரையிறுதிக்கு செல்லப்போகும் கடைசி அணி எது?
நிரம்பிய வைகை அணை: பாசனத்திற்காக 900 கன அடி நீர் திறப்பு!