gold and silver price today 10-10-2023

மீண்டும் 43 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 10) சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.43,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

கடந்த சில தினங்களாகவே குறைந்த வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் 43 ஆயிரத்தை எட்டியுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் தங்கம் விலை உயர்வு நகை பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.42,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.43,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.15 அதிகரித்து ரூ.5,380-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.75,500-க்கும் ஒரு கிராம் ரூ.75.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நாகார்ஜூனாவின் 100வது படத்தை இயக்கும் தமிழ் இயக்குனர்

ஐந்து மாநில தேர்தல்: கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *