சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 10) சவரனுக்கு ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை இறங்குமுகமாக இருந்து வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் தங்கம் விலை குறைந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.46,560-க்கும் ஒரு கிராம் ரூ.5,820-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை மாற்றமில்லாமல் விற்பனையாகும் நிலையில் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.77,500-க்கும் ஒரு கிராம் 50 காசுகள் குறைந்து ரூ.77.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
பொங்கல் பரிசு தொகுப்பு: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
உதவி செய்யக் கூட தடையா? கீதாஜீவன் பற்றி உதயநிதிக்கு சென்ற ரிப்போர்ட்!