gold and silver price today 09-12-2023

அதிரடியாக குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 9) சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.46,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு 48 ஆயிரம் ரூபாயை நெருங்கும் அளவிற்கு தங்கத்தின் விலையேற்றம் இருந்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.46,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ.5,765-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,000 குறைந்து ரூ.78,000-க்கும் ஒரு கிராம் ரூ.2 குறைந்து ரூ.78-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

ஆளுநர் மாளிகையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு!

மனம் திறந்த அமீரின் பகிரங்க கடிதம்: மீண்டும் பருத்திவீரன் பஞ்சாயத்து!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *