gold and silver price today 09-11-2023

தீபாவளி நேரத்தில் குறைந்த தங்கம் விலை!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 9) சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தமிழகத்தில் கடந்த 3 தினங்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது. தீபாவளி நேரத்தில் தங்கம் விலை குறைந்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.45,280-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.45 குறைந்து ரூ.5,615-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை குறைந்து விற்பனையாகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.300 குறைந்து ரூ.76,200-க்கும் ஒரு கிராம் 30 காசுகள் குறைந்து ரூ.76.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

ICC world cup 2023: நியூசிலாந்து – இலங்கை… மழை குறுக்கிட்டால் அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?

90 நிமிடங்கள் பிணமாக நடித்துள்ள பிரபு தேவா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *