சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 6) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.42,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை நேற்று திடீரென்று அதிகரித்தது. இதனால் மீண்டும் தங்கம் விலை உயர்ந்து விடுமோ என்று நகைப்பிரியர்கள் கவலையடைந்தனர். ஆனால் இன்று மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.42,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.42,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.5,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலையும் கணிசமாக குறைந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 குறைந்து ரூ.73,000-க்கும் ஒரு கிராம் 50 காசுகள் குறைந்து ரூ.73-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Asian Games 2023: சுழலில் சுருண்ட வங்கதேசம்: இறுதிப்போட்டியில் இந்தியா
ஜெகத்ரட்சகன் எம்.பி தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக ஐடி சோதனை!