சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 3) சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.47,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இருப்பினும் தங்கத்தின் விலை 47 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாவது நகைப்பிரியர்களுக்கு கவலையை அளித்துள்ளது.
நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.47,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.47,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.5,915-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை குறைந்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.300 குறைந்து ரூ.80,000-க்கும் ஒரு கிராம் 30 காசுகள் குறைந்து ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
கிளாம்பாக்கம் : பேருந்துகளை சிறைபிடித்து மாணவர்களின் பெற்றோர் போராட்டம்!
”தகுதியில்லா நிர்மலா சீதாராமனை நீக்க வேண்டும்: ஐ.ஆர்.எஸ். அதிகாரி குற்றச்சாட்டு