சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 2) சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.42,848-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக தங்கத்தின் விலை இறங்குமுகமாக உள்ளது. இந்நிலையில் வாரத்தின் முதல் வேலைநாளான இன்றும் தங்கம் விலை இறங்கு முகமாக உள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.42,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.42,848-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.4 குறைந்து ரூ.5,356-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை குறைந்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 குறைந்து ரூ.75,500-க்கும் ஒரு கிராம் 50 காசுகள் குறைந்து ரூ.75.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜோதி யர்ராஜியின் வெண்கலப் பதக்கம் வெள்ளியாக மாறியது எப்படி?
“கிராமங்கள் தன்னிறைவு பெற திமுக அரசு உழைக்கும்” – ஸ்டாலின்