சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 1) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.46,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று 2வது நாளாக குறைந்துள்ளது. இது தங்கத்தின் விலை விரைவில் 47 ஆயிரம் ரூபாயை கடந்துவிடுமோ என்று கவலையடைந்த நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.46,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.46,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.5,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள வேளையில் வெள்ளியின் விலை சிறிதளவு அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.300 அதிகரித்து ரூ.82,500-க்கும் ஒரு கிராம் 30 காசுகள் அதிகரித்து ரூ.82.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம்
சென்னை போலீசில் அதிரடி மாற்றம்: அமைச்சர் சேகர்பாபுவுக்கு செக்?