சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 1) சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.45,488-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து 46 ஆயிரம் ரூபாயை கடந்தது. இந்நிலையில் தற்போது 2வது நாளாக இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.45,488-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.29 குறைந்து ரூ.5,686-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை குறைந்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,200 குறைந்து ரூ.77,000-க்கும் ஒரு கிராம் ரூ.1.20 குறைந்து ரூ.77-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
சியான் 63 படத்தின் இயக்குனர் இவரா?
“அவர்களுக்கு தெரியாது”: தோனி சொன்ன குட்டி ஸ்டோரி… வைரலாகும் வீடியோ!