தங்கம், வெள்ளி விலை குறைவு!
தமிழகத்தில் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக விலை குறைந்து விற்பனையாகிறது.
நேற்று (அக்டோபர்19) ஒரு சவரன் தங்கம் ரூ. 37,600க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையிலிருந்து இன்று ரூ. 120 விலை குறைந்து ரூ. 37,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ. 15 விலை குறைந்து ரூ. 4,685க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்து வரும் அதே சமயம் வெள்ளி விலையும் குறைந்து வருகிறது. 8 கிராம் வெள்ளி நேற்று ரூ. 492-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையிலிருந்து இன்று ரூ. 5 விலை குறைந்து ரூ. 488க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ. 0.50 விலை குறைந்து ரூ. 61-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 500 விலை குறைந்து ரூ. 61,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
அண்ணா குறித்து சர்சை பேச்சு : பத்ரி சேஷாத்ரி பதவி பறிப்பு!
நடிகை தற்கொலை: முன்னாள் காதலர் கைது!