நாளுக்குநாள் எகிறும் தங்கம் விலை… வரும் நாட்களில் மேலும் உயருமா?

Published On:

| By Manjula

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (பிப்ரவரி 17) ஒரு சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்து ரூ.46,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 20 உயர்ந்து ரூ.5,780-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கம் விலையும் சவரனுக்கு ரூபாய் 168 உயர்ந்து ரூ.50,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 21 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6305-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 1 ரூபாய் அதிகரித்து, இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும், ஒரு கிலோ ரூ.78,௦00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று பெரியதொரு மாற்றமில்லை என்றாலும் கூட, இரண்டே நாட்களில் தங்கம் திடீரென சவரனுக்கு ரூபாய் 320 வரை அதிகரித்துள்ளது.

வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறையுமா? இல்லை போகப்போக அதிகரிக்குமா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

யானையை காரில் விரட்டிய அதிமுக பிரமுகர்: அபராதம் விதித்த வனத்துறை!

சென்ட்ரல் – அரக்கோணம்: இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel