திடீரென உயர்ந்த தங்கம்… காரணம் என்ன?

Published On:

| By Manjula

gold silver price February 16

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (பிப்ரவரி 16) ஒரு சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்து ரூ.46,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 20 உயர்ந்து ரூ.5,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கம் விலையும் சவரனுக்கு ரூபாய் 176 உயர்ந்து ரூ.50,272-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 22 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6284-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 1 ரூபாய் அதிகரித்து, இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும், ஒரு கிலோ ரூ.77,௦00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று பெரியதொரு மாற்றமில்லை என்றாலும் கூட, தங்கம் திடீரென சவரனுக்கு ரூபாய் 160 வரை அதிகரித்துள்ளது.

வரும் நாட்களில் விலை குறையுமா? இல்லை போகப்போக அதிகரிக்குமா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வார விடுமுறை: சென்னையில் இன்று 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஷேன் நடிக்கும் மெட்ராஸ்காரன்: ஸ்பெஷல் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel