சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (மார்ச் 8) ஒரு சவரனுக்கு ரூபாய் 120 அதிகரித்து ரூபாய் 48,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 15 அதிகரித்து ரூ.6,105-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூபாய் 128 அதிகரித்து ரூ.53,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 16 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 50 பைசா அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 79-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 79,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களிலேயே தங்கத்தின் விலை ஒரேயடியாக உயர்ந்து ரூபாய் 49,000-த்தை தொட்டுள்ளது . வெள்ளியை பொறுத்தவரை கிராமிற்கு 5௦ பைசா விலை அதிகரித்துள்ளது.
இதனை வைத்து பார்க்கும்போது வெள்ளி வாங்குபவர்களுக்கு பெரிதாக பிரச்சினை இல்லை. ஆனால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் இந்த நேரத்தில் அதுகுறித்த நினைப்பையே விட்டுவிடும் அளவிற்கு, விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தொகுதி பங்கீட்டில் இழுபறி: ஸ்டாலினை சந்தித்த திருமா
இந்தியாவின் தற்சார்பு சமூக மாற்ற விடுதலை – என்ன செய்ய வேண்டும்?- பகுதி 2