சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (மார்ச் 6) ஒரு சவரனுக்கு ரூபாய் 200 அதிகரித்து ரூ.48,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 25 அதிகரித்து ரூ.6,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூபாய் 216 அதிகரித்து ரூ.52,712-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 27 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6589-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 20 பைசா குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 78-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களிலேயே தங்கத்தின் விலை ஒரேயடியாக உயர்ந்து ரூபாய் 48,000 -த்தை தாண்டியுள்ளது. அதேநேரம் வெள்ளியை பொறுத்தவரை கிராமிற்கு 2௦ பைசா விலை குறைந்துள்ளது.
இதனால் வெள்ளியில் செய்த பொருட்களை வாங்குபவர்கள் பெரிதாக யோசிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் தங்கம் வாங்குபவர்கள் சற்று நிதானித்து விலை குறைந்ததும், தேவைப்படும் நகைகளை வாங்குவது இதயத்திற்கு நல்லது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சனாதனம்… உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா பதவிகள் என்னாகும்? உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
யோகி பாபுவை தேடி வந்த ஹிந்தி பட வாய்ப்பு!