தங்கம் விலை சரிவு: இன்றைய விலை நிலவரம்!

தமிழகம்

சென்னையில் இன்று (அக்டோபர் 21) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 37,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாகத் தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்துள்ளது.

நேற்று (அக்டோபர் 20) 22 கேரட் தங்கம் சவரனுக்கு 37,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையிலிருந்து இன்று ரூ. 160 குறைந்து ரூ. 37,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ. 20 குறைந்து ரூ. 4,665-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. 8 கிராம் வெள்ளி நேற்று 488-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ. 4 அதிகரித்து 492-க்கு விற்பனையானது.

ஒரு கிராம் வெள்ளி ரூ. 0.50 அதிகரித்து ரூ. 61.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 500 அதிகரித்து ரூ. 61,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

சர்தார், பிரின்ஸ்: ட்விட்டரில் வைரலான விமர்சனங்கள்!

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *