நெருங்கும் தீபாவளி: திடீரென்று உயர்ந்த தங்கம் விலை!

Published On:

| By Monisha

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 22) சவரனுக்கு ரூ. 600 அதிரடியாக உயர்ந்து ரூ. 37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாகத் தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 37,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையிலிருந்து இன்று ரூ. 600 விலை உயர்ந்து ரூ. 37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ. 4,665-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ, 75 விலை உயர்ந்து ரூ. 4,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை உயர்ந்துள்ள அதே சமயம் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. 8 கிராம் வெள்ளி ரூ. 13.6 விலை உயர்ந்து ரூ. 505.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ. 1.70 விலை உயர்ந்து ரூ. 63.20-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,700 விலை உயர்ந்து ரூ. 63,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மக்கள் அதிர்ச்சி

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதாலும் கடந்த மூன்று நாட்களாகத் தங்கம் விலை குறைந்து இருந்ததாலும் மக்கள் நகைகளை வாங்கிச் சென்றனர்.

இந்நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்ட விலையேற்றம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோனிஷா

மீரா மிதுனை காணவில்லை: தாய் பரபரப்பு புகார்!

தமிழக மீனவர் காயம்: இந்தியக் கடற்படை மீது வழக்குப் பதிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel