தொடர் சரிவில் தங்கம் விலை!

தமிழகம்

சென்னையில் இன்று (அக்டோபர் 29) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 37,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாகக் குறைந்து வந்த தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது. நேற்று (அக்டோபர் 28) ஒரு சவரன் தங்கம் ரூ. 37,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையிலிருந்து ஒரு சவரன் தங்கம் இன்று ரூ. 240 விலை குறைந்து ரூ. 37,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 30 விலை குறைந்து ரூ. 4,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கம் இன்று சவரன் ஒன்றுக்கு ரூ. 344 விலை குறைந்து ரூ. 41,604-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ. 43 விலை குறைந்து ரூ. 5,133-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் சரிவைச் சந்தித்துள்ளது. 8 கிராம் வெள்ளி நேற்று ரூ. 509.60-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 5.60 விலை குறைந்து ரூ. 504-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ. 0.70 குறைந்து ரூ. 63-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 700 குறைந்து ரூ. 63,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

கோவை சம்பவம் : திருவாரூரில் செல்போன்கள் பறிமுதல்!

பருவமழை தொடக்கம்: தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *