தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

Published On:

| By Kavi

gold and silver price

தங்கம் விலை இரண்டாவது நாளாக இன்றும் (செப்டம்பர் 2) ரூ.80 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை ஏறு இறங்குமுகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.80 குறைந்து ரூ.44,280-க்கு விற்பனை ஆனது.  இன்று மேலும் 80 ரூபாய் உயர்ந்துள்ளது தங்கம் விலை.

22 கேரட் தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 5545 ரூபாய்க்கும், 8 கிராம் கொண்ட ஒரு சவரன் 44360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6015 ரூபாய்க்கும், ஒரு சவரன் 48120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை இன்று 20 காசுகள் குறைந்துள்ளன.  ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 80000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

பிரியா

சிங்கப்பூர் எதிர்கொள்ளும் சவால்கள் : உறுதியளித்த தர்மன் சண்முகரத்னம்

தபால் துறையுடன் இணையும் போக்குவரத்து துறை: வீட்டிற்கே வரும் ஆவணங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel