gold and silver price 09-10-2023

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 9) சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.

22 கேரட்

கடந்த இரு வாரங்களாக 44 ஆயிரத்திற்கு மேல் இருந்த தங்கம் விலை படிப்படியாக குறைந்து 43 ஆயிரத்திற்குக் கீழ் வந்தது. இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை உயர தொடங்கியது நகைப்பிரியர்களை கவலையடைய செய்தது. ஆனால் இன்று மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.42,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.குறைந்து ரூ.5,365-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள வேளையில் வெள்ளி விலை உயர்ந்து விற்பனையாகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 அதிகரித்து ரூ.75,500-க்கும் ஒரு கிராம் 50 காசுகள் அதிகரித்து ரூ.75.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

முதல்வருடன் அன்புமணி சந்திப்பு: பேசியது என்ன?

தி ரோடு: விமர்சனம்!

+1
2
+1
3
+1
4
+1
10
+1
3
+1
1
+1
5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *