சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்டோபர் 19) சவரனுக்கு ரூ.320 உயர்ந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சமீப காலமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கம் வாங்குவதை வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை ரூ.58,000 கடந்ததால், தங்கம் வாங்கலாமா வேண்டாமா என்று யோசிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.7,280-க்கும், ஒரு சவரன் ரூ.320 உயர்ந்து ரூ.58,240-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.7,735-க்கும், ஒரு சவரன் ரூ.320 உயர்ந்து ரூ.61,880-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையும் யாரும் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 கூடி, ரூ.107-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2000 கூடி, ரூ.1,07,000க்கும் இன்று விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
‘மர்மதேசம்’ இயக்குநரின் ரீ-எண்ட்ரி!
வெளுத்து வாங்கும் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் : ஆளுநர் விளக்கம்… ஸ்டாலின் பதிலடி!