சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (மார்ச் 5) ஒரு சவரனுக்கு ரூபாய் 680 அதிகரித்து ரூ.48,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 85 அதிகரித்து ரூ.5,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூபாய் 744 அதிகரித்து ரூ.52496-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 93 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6562-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 1.20 பைசா அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 78.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 78,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களில் சிறிதளவு உயர்ந்திருந்த தங்கத்தின் விலை இன்று ஒரேயடியாக உயர்ந்து 48,000 -த்தை கடந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமிற்கு 1.2௦ பைசா அதிகரித்துள்ளது.
வெள்ளி விலையில் அதிக மாற்றமில்லை என்பதால், வெள்ளிப்பொருட்கள் வாங்குபவர்கள் பெரிதாக யோசிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் தங்கம் வாங்குபவர்கள் இப்போது நகைகள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’மஞ்சுமல் பாய்ஸ்’ வெற்றியை சிலாகித்த வெங்கட் பிரபு, பா.ரஞ்சித்