கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 2 )தள்ளுபடி செய்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் மாற்று சாதி பெண்ணை காதல் திருமணம் செய்ததாக 2015-ஆம் ஆண்டு ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
இதனை எதிர்த்து 10 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜ் தாய் சித்ராவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இரண்டு வழக்கையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
அதன்படி, கோகுல்ராஜ் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை. இதனால் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. கொலை வழக்கில் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டதில் தலையிட விரும்பவில்லை. இதனால் கோகுல்ராஜ் தாயார் சித்ரா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளனர்.
செல்வம்
’தமிழ்நாட்டின் உரிமையை கர்நாடகா பறிப்பதை ஏற்க முடியாது’: வைகோ கண்டனம்!
உருவாகும் இன்னொரு பிரம்மாண்டம்…கலைஞர் கன்வென்ஷன் சென்டர்….ஸ்டாலின் அறிவிப்பு!