கேரளாவின் பாரம்பரிய காலை உணவுகளில் ஒன்று புட்டு. பெரும்பாலும் அரிசியில் செய்யப்படும் புட்டைப் போன்று கோதுமையிலும்
என்ன தேவை?
முழுக் கோதுமை,
தேங்காய்த் துருவல்,
நெய் – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
வாணலியில் சிறு தீயில் படபடவென்று பொரியும் வரை கோதுமையை வறுத்தெடுக்கவும். ஆறிய பின்பு, மிக்ஸியில் பவுடராக அரைத்துச் சலிக்கவும். மீதமுள்ள குருணையை மறுபடியும் மிக்ஸியில் போட்டு அரைத்துச் சலிக்கவும். இப்படியாக நான்கைந்து முறை செய்து, புட்டு மாவு தயார் செய்யவும். பிறகு, புட்டு மாவில் லேசாகத் தண்ணீர் தெளித்துக் கிளறவும். இதனுடன் சர்க்கரை, தேங்காய்த் துருவல், நெய் சேர்த்துக் கலக்கவும். மாவைக் குழிக் கரண்டியில் எடுத்து, இட்லித் தட்டில் மெதுவாகத் தட்டவும். இட்லி போல உடையாமல் விழ வேண்டும். பிறகு, ஆவியில் நன்றாக வேக வைத்து எடுத்தால், கோதுமைப் புட்டு ரெடி.