மெரினாவில் மீண்டும் கண்டெடுக்கப்பட்ட பழங்கால சிலை!

தமிழகம்

மெரினா கடற்கரையில் இன்று (ஆகஸ்ட் 31) மீண்டும் பழங்கால சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெரினா கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள மணற்பரப்பில் புதைந்திருந்த 4 பழங்கால கற்சிலைகள் கடந்த வாரம்  மீட்கப்பட்டு, மயிலாப்பூர் தாசில்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக கடந்த ஜூன் மாதமும் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் எதிரே மணல் பரப்பில் புதைக்கப்பட்டிருந்த 2 பழங்கால சாமி சிலைகள் மீட்கப்பட்டன

இதுகுறித்து, மெரினா போலீசார் கலங்கரை விளக்கம் மற்றும் பட்டினப்பாக்கம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று, விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இன்று காலையில் வழக்கம்போல மெரினா கடற்கரையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள கடற்கரையில் ஒரு அடி உயரமுள்ள கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட சிலையை மெரினா போலீசார் மயிலாப்பூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் இந்தப் பழமையான சிலைகளை கோவில்களில் திருடி வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 3 மாதங்களில் தொடர்ச்சியாக மெரினாவில் 6 பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டு வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

இளம் வயது பெண்களிடம் அதிகரிக்கும் மாரடைப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி: மீண்டும் ஆளுநருக்கு கோப்பு அனுப்பி வைப்பு!

 

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *