பக்ரீத்: கோடிக்கணக்கில் ஆடுகள் விற்பனை!

Published On:

| By Gracy

பக்ரீத் பண்டிகை நாளை (ஜூலை 10) கொண்டாடப்படும் நிலையில் தமிழகம் முழுக்க கோடிக்கணக்கில் ஆடுகள் விற்பனையாகியுள்ளன.

* கடலூர் மாவட்டம், வேப்பூர் சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக காலை முதலே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்திருந்தனர். இங்கு இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமான ஆடுகள் விற்பனையானது. ஒரு ஆட்டின் விலை ரூ. 7,000 முதல் 25,000 வரை விற்பனையானது. இங்கு ரூ.5 கோடி முதல் 7 கோடி வரை ஆடுகள் விற்பனை நடந்திருக்கிறது.

* தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிடி வட சந்தையூரில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஒரு ஆடு ரூ.8,000 முதல் ரூ.15,000 வரையும் விற்பனை செய்யப்பட்டது. இங்கு ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

* நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள மோர்பாளையம் கால்நடை சந்தையில் நாட்டு வெள்ளாடு, ஜமுனா வெள்ளாடு, முணா வெள்ளாட்டு வகைகளும், நாட்டு செம்மறியாடு, துவரம் செம்மறி போன்ற ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் செம்மறி ஆடுகளே அதிகம் விற்கப்பட்டன. ரூ.10,000 முதல் ரூ.35,000 வரை ஆடுகள் விலை போனது. இந்த ஆடுகளை வாங்க சேலம், நாமக்கல் பள்ளப்பட்டி, புதுக்கோட்டை, கோவை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இஸ்லாமியர்களும் வியாபாரிகளும் வந்து வாங்கி சென்றுள்ளனர்.

* கிருஷ்ணகிரி மாவட்டம், கரூர் குந்தாரப்பள்ளி ஆட்டுச்சந்தையில் 10,000 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன. குறைந்தபட்சமாக ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை ஆடுகள் விற்பனையாகியுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் சுமார் 20,000 பேர் இந்த ஆட்டு சந்தையில் குவிந்தனர்.

* திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கே.கே.நகரில் அமைந்துள்ள நகராட்சி ஆட்டுச் சந்தையில் திண்டுக்கல், பழநி, வேடசந்தூர், அய்யலூர், கன்னிவாடி, செம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் கால்நடைகளை விற்பனை செய்யவும், வாங்கி செல்லவும் வந்ததால் சந்தை களைகட்டியது. செம்மறி ஆடு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையிலும், வெள்ளாடு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரையிலும், வெள்ளாட்டு குட்டிகள் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரையிலும் விற்பனையானது. இங்கு சுமார் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வார சந்தையில், பக்ரீத் பண்டிகையை ஒட்டி ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. ஆடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.4,000 முதல் அதிகபட்சமாக ரூ.35,000 வரை விலை போனது. இங்கு ஒரு நாளில் மட்டும், 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் ஆடுகளை விற்க வந்த உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

* திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சி வாரச் சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக பெங்களூரு மற்றும் சேலம், திருவண்ணாமலை, வேலுர், தருமபுரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து குவிந்தனர். இங்கு செம்மறி ஆடுகள் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையிலும் கருப்பு ஆடுகள் ரூ.8,000 முதல் ரூ.15,000 விற்கப்பட்டன.

இந்த வாரச் சந்தையில் மட்டும் சுமார் 50,000 க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ. 5 கோடி ஆகும்.

* ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள புன்செய்புளியம்பட்டியில் நடைபெற்ற கால்நடை சந்தையில் திருச்சியில் இருந்து கரிஞ்சி ரக செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆடுகளின் எடைக்கு ஏற்ப அதனுடைய விலை ரூ.10 ,000 முதல் ரூ.30,000 வரை விற்பனையானது. 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு ரூ.7,000 வரை விற்பனையானது. காலை 6 மணிக்கு தொடங்கிய வாரச் சந்தையில் இரண்டு மணி நேரத்தில் ரூ.80 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

* திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே அய்யலூரில் உள்ள வாரச்சந்தையில் செம்மறி ஆடுகள் ரூ.16,000 முதல் ரூ.30,000 வரையிலும், வெள்ளாடுகள் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையிலும் இங்கு ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனை நடந்ததால் கால்நடை விற்போர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கேன்ஸ் விழாவில் கலக்கும் ஐஸ்வர்யாராய்

சவுக்கு சங்கருக்காக வேலுமணி மூவ்!

எலக்சன்: விமர்சனம்!

தவெக-வுடன் கூட்டணியா? – விஜய் ஸ்டைலில் சீமான் பதில்!

மகாராஷ்டிரா: உள்ளே, வெளியே… பாஜகவுக்கு எதிரான பல்முனைத் தாக்குதல்!

ஸ்வாதி மாலிவால் புகார்: கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது!

விஜய்யின் தி கோட்… வெங்கட் பிரபு வெளியிட்ட VFX அப்டேட்!

தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் கனமழை? வானிலை மையம் ரிப்போர்ட்!

2025 ஐபிஎல் முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை: காரணம் என்ன?

பிரதமர் மோடி பயோபிக்கில் நானா? சத்யராஜ் பளீர் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share