சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. give full protection to chennai high court
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின் போது, உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்படவிருந்த வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
கடந்த ஜனவரி 27ஆம் தேதி இதுதொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதிகள், நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை அதிகரிக்கவும், வழக்கறிஞர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆலோசனைகளை வழங்குமாறு காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை, அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கும் உத்தரவிட்டனர்.
வழக்கறிஞர்கள் சங்கம் பதில்! give full protection to chennai high court

இந்த வழக்கு இன்று (ஜனவரி 29) விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை என்றும் பாதுகாப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட இருந்த வெடிகுண்டு நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதிகள், உயர் நீதிமன்ற கட்டடத்திற்கு அளிக்கப்படும் பாதுகாப்பை போலவே உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறினார்.
ஸ்கேனர் வைத்து நீதிமன்றத்துக்குள் கொண்டு வரப்படும் அனைத்து உடைமைகளையும் பரிசோதிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், “ஏற்கனவே உள்ள நுழைவு வாயில்களில் மாற்றம் எதுவும் செய்யாமல் அனைத்து நுழைவு வாயில்களிலும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
பாதுகாப்பில் எந்த குறைபாடும் இருக்கக் கூடாது என்றும் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் உத்தரவிட்ட நீதிபதிகள், போதிய அளவு சிசிடிவி கேமிராக்களை நிறுவவும் உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கறிஞர், மனுதாரர்களை முன்கூட்டியே நீதிமன்றத்துக்கு வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து பிப்ரவரி 7ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். give full protection to chennai high courtgive full protection to chennai high court