கிச்சன் கீர்த்தனா: ஜிஞ்சர் சிக்கன் மசாலா

Published On:

| By Selvam

பலரும் விரும்பி சாப்பிடும் சிக்கனைக் கொண்டு பல சுவையான ரெசிப்பிகளைச் செய்து சுவைத்திருப்போம்.  இந்த ஜிஞ்சர் சிக்கன் மசாலாவை இன்று செய்து பாருங்கள். அட்டகாசமான சுவையுடன் வீட்டிலுள்ள அனைவருக்கும் பெஸ்ட் சைடிஷாகவும் அமையும்.

என்ன தேவை?

சதைப்பிடிப்பான கோழி கால்கள் – 2
பெரிய வெங்காயம்  – 50 கிராம்  (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி – 2 கிராம் (தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 50 மில்லி
உப்பு – தேவையான அளவு

மசாலா அரைக்க…

இஞ்சி – 5 கிராம் (தோல் நீக்கி நறுக்கவும்)
சின்ன வெங்காயம் – 5 கிராம் (நறுக்கவும்)
துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

அரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்டாக அரைத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், பெரிய வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கி, கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து குறைந்த தீயில் பச்சை வாசனை போக வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். கோழிக்கறியை இதனுடன் சேர்த்து வதக்கி அரைத்த மசாலாவைச் சேர்த்து 400 மில்லி தண்ணீர் விட்டு குறைந்த தீயில் கோழிக்கறி வெந்து, மசாலா எல்லாம் ஒட்டி கொள்ளும்போது அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறவும்.

கிச்சன் கீர்த்தனா: சமைத்த உணவை சூடுபடுத்திச் சாப்பிடுபவரா நீங்கள்?

கிச்சன் கீர்த்தனா: செட்டிநாடு ஃபிஷ் ஃப்ரை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share