பழனி கோவில் பஞ்சாமிர்தத்தில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக பரவி வரும் தகவல் குறித்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு இன்று (செப்டம்பர் 20) விளக்கம் அளித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரசாத லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் லட்டு தயாரிப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினார்.
கறுப்பு பட்டியலில் ஏ.ஆர். டெய்ரி!
அவரது உத்தரவின் பேரில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ், திருப்பதி லட்டு தயாரிக்க சேர்க்கப்படும் நெய்யில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியது ஆய்வு முடிவில் அடிப்படையில் உண்மை தான் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர், முதற்கட்டமாக லட்டு கலப்பட புகாரில் சிக்கியுள்ள ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது என்றும், அந்நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.
வதந்தி மட்டுமே!
இதற்கிடையே தமிழ்நாட்டில் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தம் தயாரிக்க, தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்திடமிருந்து நெய் வாங்கப்படுவதாக சமூகவலைதளங்களிலும், வாட்ஸ் அப் குருப்பிலும் தகவல் பரவியது.
இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்த வந்த நிலையில், பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்து பெறப்படுவதாக தமிழக அரசின் சார்பில் இது சமய அறநிலையத்துறை விளக்கம் தற்போது அளித்துள்ளது.
தமிழக அரசின் இந்த விளக்கத்தை அடுத்து பழனி முருகன் கோவில் பக்தர்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
திருப்பதி லட்டு சர்ச்சை: திண்டுக்கல் நெய் நிறுவனத்தில் சோதனை!