தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.40 லட்சம் வழங்க மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 11) உத்தரவிட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த ஃப்ளோரா மதியாஸ்கேன் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு கருத்தரிப்பு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஜிஜி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அங்கு சோதனை செய்த மருத்துவர்கள், கருப்பையில் கட்டி வளர்வதாக கூறி அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
அதன்பின்னர் சிறிது காலத்தில் அடிவயிற்றில் வலி, மூச்சுத் திணறலால் கடும் சிரமத்திற்கு உள்ளானார் ஃப்ளோரா. அப்போது சோதனை செய்து பார்த்ததில், அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் காரணமாக அவரது பெருங்குடல் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட ஜிஜி மருத்துவனை தனக்கு ரூ.1.50 கோடி இழப்பீடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஃப்ளோரா வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்தைக்கேட்ட நிலையில், தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட ஃப்ளோராவிற்கு 2014ம் ஆண்டு முதல் 12 சதவீத வட்டியுடன் ரூ.40 லட்சம் இழப்பீட்டை ஜிஜி நிறுவனம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆட்டநாயகன் ஜடேஜாவுக்கு அபராதம் : குவியும் கண்டனங்கள்!
ஆளுநர் மாளிகை பள்ளிவாசல் மூடப்பட்டிருப்பது ஏன்? ஜவாஹிருல்லா கேள்வி!