வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையில் நேற்று(அக்டோபர் 14) இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் ‘வெதர்மேன்’ பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ” மேகக்கூட்டங்கள் வலுவிழப்பதுபோல் தெரியவில்லை. அவை தொடர்ந்து ஒன்றுகூடி வருவது மட்டுமல்லாமல், ஒரே இடத்தில் நிலைத்து நிற்கின்றன. இதன்படி பார்த்தால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் பெய்யும் என்பது தெரிகிறது.
அதனால் இன்று(அக்டோபர் 15) அலுவலகத்திற்கு வந்த மக்கள் விரைவாக வீட்டுக்குச் செல்லலாம். நாளை இன்றைய தினத்தை விட, பலத்த கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் சில பகுதிகளில் இது வரை 20 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.