சென்னையில் 4 மாதங்களுக்கு பிறகு 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.7.50 உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன.
அந்த வகையில் ஆகஸ்ட் முதல் நாளான இன்று உயர்த்தப்பட்ட கேஸ் சிலிண்டரின் புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது.
சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,809.50 ஆக இருந்த நிலையில், இன்று முதல் 7 ரூபாய் 50 காசுகள் உயர்ந்துள்ளது. இதன்மூலம் இன்று முதல் அவை 1,817 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை என 4 மாதங்களில் கியாஸ் சிலிண்டரின் விலை 4 மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது உயர்ந்துள்ளது.
அதே நேரம் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.818.50 என்ற அளவிலேயே தொடர்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 நியூஸ் : வயநாடு செல்லும் ராகுல் முதல் சென்னை புதிய மேம்பாலம் திறப்பு வரை!
ஹெல்த் டிப்ஸ்: பணியிடத்தில் களைப்பு… விரட்டுவது எப்படி?
பியூட்டி டிப்ஸ்: வெயிட்லாஸுக்கு உதவும் ஊறவைத்த சப்ஜா விதை நீர்!