குண்டர் தடுப்புச்சட்டம்: காவல்துறை மீது நீதிமன்றம் அதிருப்தி!

தமிழகம்

குண்டர் சட்டத்தின் விதிகளை மனதில் கொள்ளாமல் வழக்குப் போட்டுள்ளதாகக் கூறி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரை விடுவித்து இருக்கிறது.

திண்டுக்கல்லை சேர்ந்த ஸ்ரீதர், ராஜ்குமார், ராஜேஸ்வரன்,கருணாகுமார் ,ரஞ்சித் ஆகியோர் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இதற்கான உத்தரவை  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும் பிறப்பித்தார். ஐந்து பேரையும் தொடர் குற்றத்தில் ஈடுபட்டு வருவதாக கூறி காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி இவர்களின் தாய் மற்றும் மனைவி ஆகியோர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் சுந்தர் மோகன் ஆகியோர் முன்னிலையில் இன்று(டிசம்பர் 20)விசாரணைக்கு வந்தது. இரண்டு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐந்து நபர்கள் மீது காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி இவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கில் ஒருவரை தவிர மற்ற நபர்கள் மீது வேறு வழக்குகள் இல்லை. இதனை அரசு தரப்பு வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார்.

ஆனால் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் இந்த பகுதியில் தொடர் குற்றத்தில் ஈடுபடுவது போல் குண்டர் தடுப்பு சட்டத்தை இவர்கள் மீது பயன்படுத்தி உள்ளனர். குண்டர் தடுப்புச் சட்டத்தை இயந்திரத்தனமாக  பயன்படுத்தி உள்ளனர்.

மேலும் காவல்துறையினர் இந்த வழக்கை பொறுத்தவரை முறையாக விசாரணை செய்யாமல், குண்டர் தடுப்பு காவல் விதிகளை மனதில் கொள்ளலாமல், இந்த சட்டத்தை பயன்படுத்தி உள்ளதால் இவர்கள் மீது போடப்பட்ட குண்டர்  தடுப்பு சட்டத்தை ரத்து செய்கிறோம்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.

கலை.ரா

மன்னிப்பா? மறுத்த கார்கே : பாஜக கடும் அமளி!

மோதிக்கொண்ட ஆசிரியர்கள்: தடுத்த சிறுவனை கொன்ற கொடூரம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *