ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக, குட்டி விநாயகர் முதல் பிரமாண்டமான பல வகையிலான விநாயகர்கள் சிலை தயாரிப்பு கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது,.
தமிழகத்தில் பூம்புகார் விற்பனை நிலையங்களிலும் விநாயகர் சதுர்த்தி கண்காட்சி களைக்கட்டி உள்ளது. பூம்புகார் விற்பனை நிலையத்தில் மண்ணால் ஆன விநாயகர், காகித கூழ் விநாயகர், மரத்தால் செய்யப்பட்ட விநாயகர், பஞ்சலோக விநாயகர், பித்தளை விநாயகர், தஞ்சாவூர் ஓவியத்திலான விநாயகர் என பல வித விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன.
செப்டம்பர் 2-ஆம் தேதி துவங்கிய கண்காட்சி வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. 10 சதவிகித தள்ளுபடியும் தரப்படுகிறது. ரூ.100 முதல் ரூ.4.5 லட்சம் வரையிலான விநாயகர் சிலைகள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் டெல்லி, கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் பூம்புகார் விற்பனை நிலையங்களிலும் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இது தவிர சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளையும் மக்கள் வாங்கி செல்கின்றனர். இதனால், கடைத் தெருக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள கருங்குளத்தைச் சேர்ந்த பால்பாண்டி என்பவர் செய்துள்ள விநாயகர் சிலை அனைவரையும் கவர்ந்துள்ளது.
பனையேறும் தொழில் செய்து வந்த இவர், ஒரு முறை பனையில் இருந்து தவறி விழுந்தார். அதன்பின்னர் இவரால் பனை ஏற முடியாத நிலை ஏற்பட்டது. அதற்கு பிறகு, பனை ஓலையில் பல்வேறு உருவங்களை பின்னுவதில் தேர்ச்சி பெற்றார். தற்போது, விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு இவர் உருவாக்கிய பனை ஓலை விநாயகரை மக்கள் வெகுவாக ரசித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
யானை உள்பட 150 விலங்குகளை கொன்று மக்களுக்கு உணவு… நமீபியாவில் நடக்கும் கொடூரம்!
அந்த ஒரு நடிகர்தான் தமிழ் சினிமாவில் பெண்களை திரும்பி பார்க்காதவர்… யாரை சொல்கிறார் நடிகை விசித்ரா