விநாயகர் சதுர்த்தி பொது விடுமுறையைச் செப்டம்பர் 18ம் தேதிக்கு (திங்கள் கிழமை) மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் வரும் அமாவாசையிலிருந்து, 4ஆவது நாள் கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் விடுமுறை தின குறிப்பில் செப்டம்பர் 17ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது
அன்றைய தினம் ஞாயிறு விடுமுறை தினமாகும். இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் விடுமுறை தினத்தில் பண்டிகைக்கு விடுமுறை இல்லையா என்று கவலையிலிருந்தனர்.
மறுபக்கம் இந்த மாதம் செப்டம்பர் 14ஆம் தேதி அமாவாசை வருகிறது. அதிலிருந்து 4ஆவது நாள் செப்டம்பர் 18ஆம் தேதி காலை 11.28 மணிக்குச் சதுர்த்தி தொடங்கி அடுத்த நாள் 19ஆம் தேதி 11.44 மணிக்கு முடிவடைகிறது.
இந்நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதி விடுமுறையை ரத்து செய்துவிட்டு செப்டம்பர் 18ஆம் தேதி விடுமுறை என தமிழக அரசு இன்று (ஆகஸ்ட் 31) அறிவித்துள்ளது.
இதனால் வெளியூரில் படிக்கும் மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் 16,17,18 என வார விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு ஊருக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.
பிரியா
முகூர்த்த நாள், வார விடுமுறை : சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
பிரசவத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களை தவிர்க்கும் பெண்கள்: ஆய்வு சொல்வது என்ன?