காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
காந்தி 154-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திரத்திற்காக காந்தியின் தியாகங்களை நினைவுகூறும் வகையில் காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று காலை டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகம் வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் கீழ் வைக்கப்பட்ட காந்தி உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டனர்.
பின்னர் சென்னை சர்வோதயா சங்கம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட கலை நிகழ்ச்சிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் கண்டுகளித்தனர்.
முன்னதாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேசினார்.
அப்போது கிராம சபைகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கிராம சபையை கருத்து பரிமாற்ற களமாக கருதி மக்கள் கலந்து கொள்ள வேண்டும். மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் அதிகளவில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
ஜோதி யர்ராஜியின் வெண்கலப் பதக்கம் வெள்ளியாக மாறியது எப்படி?