நினைத்ததை நினைத்த இடங்களுக்குச் சென்று சாப்பிட முடிந்தாலும் வீட்டிலேயே செய்து சாப்பிடும் ருசியே தனி தான். ஈஸியாக செய்யக்கூடிய இந்த ஃப்ரூட்டி சன்னா சாலட்டை வீட்டிலேயே செய்து அசத்துங்கள். அனைத்து வயதினருக்கும் ஏற்ற இந்த சாலட்டை நீரிழிவாளர்களும் ருசிக்கலாம்.
என்ன தேவை?
வேகவைத்த கடலைப்பருப்பு – ஒரு கப்
நறுக்கிய வெள்ளரி- அரை கப்
விதை, தோல் நீக்கிய ஆரஞ்சு சுளை – அரை கப்
துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் – அரை கப்
துண்டுகளாக நறுக்கிய தக்காளி – அரை கப்
பொடியாக நறுக்கிய மல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைப் பழச்சாறு – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் உப்பையும் மிளகுத்தூளையும் தவிர மற்ற எல்லா பொருட்களையும் கலக்கவும். சாப்பிடுவதற்கு முன் உப்பையும் மிளகுத்தூளையும் தூவவும். ‘ஜில்’லென்று பரிமாறவும்.
மிக்ஸி, கிரைண்டர், ஃபிரிட்ஜ் வாங்க போறீங்களா… வெயிட் ப்ளீஸ்!
கிச்சன் கீர்த்தனா : வேர்க்கடலை – முளைப்பயறு சாலட்