தனியாகப் பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகள்கூட இந்த கலர்ஃபுல் உணவை விரும்பிச் சாப்பிடுவார்கள். அவர்களின் விருப்ப உணவாக இந்த ஃப்ரூட்ஸ் டிலைட் அமையும். இதை உணவாகவும் நொறுக்குத்தீனிகளுக்கு பதிலாகவும் கொடுக்கலாம். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் கிடைப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பெரியவர்களும் சாப்பிட ஏற்ற ஹெல்த்தியான உணவு இது.
என்ன தேவை?
மாதுளை முத்து – அரை கப்
டைமண்ட் கற்கண்டு – 2 டேபிள்ஸ்பூன்
தேன் – ஒரு டீஸ்பூன்
வாழைப்பழம் – ஒன்று (நறுக்கவும்)
பேரீச்சம் பழம் – 5 (கொட்டை நீக்கி நறுக்கவும்)
காய்ந்த திராட்சை – ஒரு டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் மாதுளை, கற்கண்டு, தேன், வாழைப்பழம், பேரீச்சம் பழம், காய்ந்த திராட்சை அனைத்துப் பழங்களையும் போட்டு, தேன் ஊற்றிக் கிளறி, குழந்தைகளுக்கு ஸ்பூன் போட்டுச் சாப்பிடத் தரவும்.