சென்னை டூ குமரி : நிதின் கட்கரியிடம் கோரிக்கைகள் வைத்த எ.வ.வேலு

தமிழகம்

சென்னை முதல் கன்னியாகுமரி வரை மேற்கொள்ள வேண்டிய சாலைப்பணிகள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம், அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி தலைமையில் நேற்று (செப்டம்பர் 30) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு அரசின் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டார்.

அப்போது அவர்,  “தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்களிப்பது தமிழ்நாட்டிற்கு தேவையான புதிய திட்டப் பணிகளான கிளாம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரை மற்றும் மதுரவாயல் முதல் சென்னை வெளிவட்டச் சாலை வரை உயர்மட்டச் சாலை அமைத்தல்

செங்கல்பட்டு முதல் உளுந்தூர்பேட்டை வரை எட்டு (8)வழித்தடமாக தரம் உயர்த்துதல் திருவாரூர் புறவழிச்சாலை அமைத்தல் கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை நான்கு வழித்தடமாக மேம்படுத்துதல் விக்கிரவாண்டி கும்பகோணம் தஞ்சாவூர் நான்கு வழித்தடமாக்கும் பணியினை விரைவுப்படுத்துதல் திருவாரூர் ரயில்வே மேம்பாலம் மறுகட்டுமானம் செய்தல் திருவண்ணாமலை மற்றும் பல்லடம் புறவழிச்சாலை அமைத்தல் வள்ளியூர் திருச்செந்தூர் சாலை கொள்ளேகால் ஹானூர் சாலை மேட்டுப்பாளையம் பவானி சாலை பவானி கரூச் சாலை ஆகிய நான்கு சாலைகளையும் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்துதல் திருச்சி பால் பண்ணை முதல் துவாக்குடி வரை சாலையை மேம்படுத்துதல் கோயம்புத்தூர் புறவழிச்சாலையை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்துதல்

தாம்பரம் மதுரவாயல் மாதவரம் புறவழிச்சாலையில் (சென்னை புறவழிச்சாலை) விடுபட்ட இணைப்புகள் / வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலை பணிகளை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

30 ஆயிரம் இருக்கைகள், புத்தர் முதல் அண்ணா வரை… விசிக மாநாட்டு பணிகள் மும்முரம்!

அதிரடியாய் நுழைந்த போலீஸ் படை… ஈஷாவின் பதில் என்ன?

+1
0
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *