விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள்!

Published On:

| By christopher

விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படும் என்று வேளாண்மை உதவி இயக்குநர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி பகுதியில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் மூலம் மலைவேம்பு, தேக்கு, வேம்பு மற்றும் பூவரசு மரக்கன்றுகள் 100 சதவிகித மானியத்தில் இலவசமாக விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.

தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் மூலம் கிடைக்கப்பெறும் நீரினை பயன்படுத்தி பயன் தரும் மரக்கன்றுகளை நட்டு சுலபமாக பராமரித்திடலாம். நூறு சதவிகித மானியத்தில் மரக்கன்றுகளைப் பெற ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகம் நகல், கணினி சிட்டா மற்றும் அடங்கல் நகல் புகைப்படம் ஒன்று.

இந்த ஆவணங்களை வழங்கி தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரிடம் பதிவு செய்து மரக்கன்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஞானவேல் ராஜாவின் வார்த்தைகள் பொய்யானது: சேரன் குற்றச்சாட்டு!

கிச்சன் கீர்த்தனா: வெஜ் – ஹெல்த் சூப்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

லேசான மழை… கன பாலிடிக்ஸ்: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share