free parking facility in chennai metro

இனி இலவச பார்க்கிங் இல்லை: மெட்ரோ நிர்வாகம்!

தமிழகம்

சென்னை நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த ஒரு மாத காலமாக பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச வாகன நிறுத்தம் சேவை நாளை செயல்படாது என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ இன்று (மே 30) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”சென்னை மெட்ரோ பயண அட்டை அல்லது டிஜிட்டல் கட்டண முறையை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் வாகன நிறுத்தம் செய்து கொள்ளலாம்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகளின் வாகன நிறுத்தும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சமீபத்தில் நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் கூடுதலாக விரிவுபடுத்தப்பட்டுள்ள இருசக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகன நிறுத்தும் இடத்தை திறந்துள்ளது.

இந்த விரிவுபடுத்தப்பட்ட வாகன நிறுத்தும் இடத்தில் 1000 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 60 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும்.

நங்கநல்லூர் சாலை மெட்ரோ வாகன நிறுத்தும் இடத்தில் ஏப்ரல் 28 முதல் மே 31 வரை மெட்ரோ பயணிகளுக்காக இலவசமாக வாகன நிறுத்தம் வசதி இயக்கப்பட்டது.

இந்த நிலையில், மே மாதம் முடிவடைவதால், ஜூன் 1, 2023 முதல் சென்னை மெட்ரோ இரயில் பயண அட்டை அல்லது டிஜிட்டல் கட்டண முறைகள் மூலம் பார்க்கிங் கட்டணத்தை செலுத்தி, இனிமேல் பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மோனிஷா

மத்திய அரசுக்கு மல்யுத்த வீரர்கள் 5 நாட்கள் கெடு!

திருப்பதி தேவஸ்தானத்தில் ஐபிஎல் கோப்பைக்கு பூஜை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *