ஃபீரி பயர் விளையாட்டு : மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி?

தமிழகம்

தடை செய்யப்பட்ட ஃபீரி பயர் விளையாட்டு ஆன்லைனில் எவ்வாறு கிடைக்கிறது என்று மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்த அயறின் அமுதா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், எனது மகள் இதழ் வில்சன் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டம் படித்து வருகிறார். எனது மகள் கடந்த ஆறாம் தேதி முதல் காணவில்லை.

இது குறித்து கன்னியாகுமரி வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். புகாரினை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனது மகள் பப்ஜி மற்றும் ஃபிரி பயர் ஆகிய ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.

இதன் மூலம் என் மகளுக்கு ஜெப்ரின் என்பவர் பழக்கமாகி உள்ளார். எனவே அவர் தான் எனது மகளை கடத்தியிருக்க வேண்டும். எனது மகளை மீட்டு தர காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் இந்திய அரசால் ஆன்லைன் விளையாட்டான ஃப்ரீ ஃபயர் தடை செய்யப்பட்டு விட்டது.

இருந்த போதும் இந்த விளையாட்டை எவ்வாறு மீண்டும் விளையாட முடிகிறது. இது போன்ற விளையாட்டுகளால் இளைய சமுதாயம் வீணாகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தடை செய்யப்பட்ட இது போன்ற விளையாட்டுகள் ஆன்லைனில் கிடைக்காமல் இருப்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

சைபர் குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுத்து உள்ளார்கள். ஏன் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இதுகுறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

கலை.ரா

ஆன்லைன் ரம்மி: தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *