60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்க வரும் 21ஆம் தேதி முதல் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.
மாநகரப் பேருந்து கழகப் பேருந்துகளில் மூத்த குடிமக்களும் இலவசமாக பயணம் செய்ய கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதாவது மாநகரப் பேருந்து போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் வகையில் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
6 மாதங்களுக்கு ஒருமுறை இந்த இலவச டோக்கன் வழங்கப்படும். வரும் ஜனவரி 2023 முதல் ஜூன் 2023 வரை அடுத்த அரையாண்டிற்கு மூத்த குடிமக்கள் இலவச பயணம் செய்ய டோக்கன் விநியோகம் செய்யப்படவுள்ளது.
மாநகரப் போக்குவரத்து கழகத்தில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்ய வரும் 21ஆம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்படும்.
சென்னை மாநகரம் முழுவதும் 40 இடங்களில் மூத்த குடிமக்களுக்கு டோக்கன்கள் வழங்க ஏற்பாட செய்யப்பட்டுள்ளது.
குடும்ப அட்டை சான்றுடன் ஆதார் அட்டை கல்வி சான்றிதழ் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்று சமர்ப்பித்து மாநகர பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள டோக்கன்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
கலை.ரா
அதிகரிக்கும் புற்றுநோய்: மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்!