நீலகிரி: மகளிருக்காக 99 கட்டணமில்லா பேருந்துகள் இயக்கம்!

Published On:

| By christopher

மலை மாவட்டங்களில் இதுவரை மகளிருக்காக கட்டணமில்லா பேருந்துகள் இயங்காத நிலையில்,  நீலகிரியில் நேற்று (டிசம்பர் 25) முதல் 99 பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன.

நீலகிரி மாவட்டம் உதகையில் மகளிருக்கான விடியல் பயணத்திட்டம் விரிவாக்கம் மற்றும் புதிய பேருந்துகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அமைச்சர்கள் சிவசங்கர், கா.ராமச்சந்திரன், , மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தை விரிவாக்கம் செய்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்தை வழங்கிடும் ‘விடியல் பயணம் திட்டம்’ இதுவரை மலைப் பகுதிகளில் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், இந்தத் திட்டம் மலைப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதன்படி ‘மகளிர் விடியல் பயணம் திட்டம்’  உதகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் மொத்தம் உள்ள 160 பேருந்துகளில், 99 பேருந்துகள் இன்று முதல் கட்டணமில்லா பேருந்துகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் படிப்படியாக அனைத்து மலைப் பகுதிகளிலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: முடி உதிர்வைத் தடுக்கும் உணவுகள்!

அ.இ.அ.தி.மு.க தேர்தல் முழக்கமும், அரசியல் குழப்பமும்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா : கறுப்பு உளுந்து உருண்டை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share