சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு!

Published On:

| By christopher

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு கூடுதல் நீதிபதிகளுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா இன்று (மே 23) பதவிப்பிரமாணம் செய்து  வைத்தார்.

கடந்த மார்ச் மாதம், தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையின்படி மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்த்தில் இருந்த உயா் நீதிமன்றத் தலைமை பதிவாளா் பி.தனபால், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆா்.சக்திவேல்,

சென்னை தொழிலாளா் நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.குமரப்பன், கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே.ராஜசேகா் ஆகிய நான்கு பேரை சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உத்தரவிட்டார்.

இதனையடுத்து புதிய நீதிபதிகள் நால்வருக்கும் இன்று காலை 10.35 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்தில் உள்ள கூடுதல் கூட்ட அரங்கில் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பதவிப்பிரமாணம் செய்து  வைத்தார்.

தொடர்ந்து அட்வகேட் ஜெனரல் ஆர்.சுண்முகசுந்தரம், புதிதாக நியமிக்கப்பட்ட கூடுதல் நீதிபதிகளை கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் வரவேற்றார்.

இதன்மூலம் புதிய நீதிபதிகளுடன் சேர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை தற்போது 64 ஆக (48 நிரந்தர நீதிபதிகள் + 16 கூடுதல் நீதிபதிகள்) உயர்ந்தது.

எனினும் இன்னும் 11 நீதிபதிகளின் பதவிகள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

சி.பி.எஸ்.சி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்!

குடிசை பகுதி டூ சர்வதேச மாடல்: இணையத்தை கலக்கும் தாராவி சிறுமி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share