மிக்ஜாம் புயல்: நாளை பொது விடுமுறை அறிவிப்பு!
மிக்ஜாம் புயல் காரணமாக நாளையும் நான்கு மாவட்டங்களுக்குப் பொது விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.
மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து வரலாறு காணாத மழை பெய்து வருகிறது .
இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இன்று இரவு சென்னைக்கு மிகக் கனமழை இருப்பதால் நாளையும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் நாளை டிசம்பர் 5ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.
சண்முக பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மின்சாரம் எப்போது வரும்? – அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!
CycloneMichaung புயல் எங்கே உள்ளது? எப்படி நகர்கிறது? சென்னை எப்போது தப்பிக்கும்?