கடந்த 3 நாள் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு சென்றவர்கள் நேற்று (ஆகஸ்ட் 15) இரவு முதல் சென்னை திரும்பி கொண்டிருக்கின்றனர்.
இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வழக்கத்தை காட்டிலும் டோல் கேட்டுகளில் அதிக நேரம் பேருந்துகள் நின்றதாக பயணிகள் கூறுகின்றனர்.
குறிப்பாக, சென்னைக்குள் நுழையும் முக்கிய பகுதியான செங்கல்பட்டில் கார்கள், பேருந்துகள் அணிவகுத்து வந்து கொண்டிருந்தன. இந்நிலையில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு விபத்து ஏற்பட்டது.
பொத்தேரி சாலையில் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த நான்கு கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனங்களின் பின்புறம் சேதமடைந்தது. காரில் பயணித்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
வங்கி கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது!