சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள சாலைகளில் சுமார் 3.7 கி.மீ தூரத்திற்கு இன்றும், நாளையும் தெற்காசியாவின் முதல் இரவு நேர ஸ்டிரீட் கார் பந்தயப் போட்டி நடக்க இருக்கிறது. தமிழக அரசு மற்றும் தனியார் கார் பந்தயம் இணைந்து நடத்தும் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
ஃபார்முலா 4 கார் போட்டியின் முதல் சுற்று ஏற்கனவே சென்னை கார் ரேஸ் டிராக்கில் நடந்து விட்ட நிலையில் இந்த போட்டியின் முக்கியமான இரண்டாவது சுற்று போட்டி தான் தற்போது சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள சாலைகளில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் போட்டி அட்டவணை, போட்டிக்கான டிக்கெட்டுகளை எப்படி எடுப்பது, டிவி, ஆன்லைன் மூலம் எப்படி போட்டிகளை நேரலையில் பார்ப்பது குறித்து இங்கு காணலாம்.
டிக்கெட் விலை நிலவரம்!
பேடிஎம் இன்சைடர் தளத்தின் மூலம் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ளலாம். இந்த போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெறும் நிலையில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனியாகவும் அல்லது இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒரே டிக்கெட்டையும் புக் செய்யலாம்.
தனியாக ஒரு நாளுக்கு டிக்கெட்கள் விலை குறைந்தபட்சமாக ரூ. 1999க்கு விற்கப்படுகிறது. மேலும் ரூ. 3999, ரூ. 7999 மற்றும் ரூ. 10,999 ஆகிய விலைகளில் விற்பனையாகி வருகிறது.
இதுவே இரண்டு நாட்கள் சேர்த்து போட்டியை பார்க்க டிக்கெட்டாக வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்ச டிக்கெட் 2125க்கு விற்பனையாகிறது. மேலும் ரூ.2499, ரூ.11,899, மற்றும் ரூ.16,999 ஆகிய விலைகளில் டிக்கெட்கள் விற்பனையாகி வருகிறது.
18 இடங்களில் பார்க்கிங்!
பார்க்கிங் வசதிக்காக தீவுத்திடலை சுற்றி சென்னைப் பல்கலைக்கழக வளாகம், சென்னை பிரஸ் கிளப் சாலை, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மைதானம், கலைவாணர் அரங்கம், சிந்தாதிரிப்பேட்டை மாநகராட்சி மைதானம், கேந்திரிய வித்யாலயா மைதானம், ராஜரத்தினம் ஸ்டேடியம் உள்ளிட்ட 18 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், டிக்கெட்டில் குறிப்பட்டுள்ள பகுதிக்கு அருகே இருக்கும் பார்க்கிங் வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த இரண்டு நாட்களிலும் மதியம் 2:30 மணிக்கு இந்த நிகழ்ச்சிகள் துவங்குகிறது. 3 மணி முதல் கார் பந்தயம் என்பது நடக்க துவங்கி விடும். இரவு 10 மணி வரை இந்த போட்டிகள் நடைபெறும்.
நேரலையில் காண…
இந்த போட்டியை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 2 சேனலில் நேரலையாக காணலாம். ஃபேன் கோடு (FAN CODE) என்ற ஆப்பை ஆன்லைனில் போட்டியை நேரலையாக காணலாம்.
இதற்கிடையே ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் சர்க்யூட் கார் பந்தயத்தை இலவசமாக காண விளையாட்டுத்துறை சார்பில் ‘Free Ticket Code’ அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முதல் 500 நபர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சூர்யாவின் சனிக்கிழமை : முதல்நாள் வசூல் எவ்வளவு?
டாப் 10 நியூஸ் : ஃபார்முலா 4 கார் ரேஸ் முதல் ’GOAT’ 4வது சிங்கிள் ரிலீஸ் வரை!