தொடர் மழை காரணமாக சென்னையில் நடைபெறவிருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று பலத்த காற்றுடன் சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. ஏராளமான சாலைகளிலும் நீர் தேங்கியுள்ளது.
தொடர்ந்து மழை நீரை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள சாலையில் டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதி இரவு நடைபெறவிருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழைநீர் வெளியேற்றம், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், 2023 டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தய நிகழ்வுகள் தமிழ்நாடு அரசால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம்… ஆனால் மீண்டும் உள்ளே வர முடியுமா?
தலைவர்கள் மறுப்பு… இந்தியா கூட்டணி கூட்டம் ஒத்திவைப்பு!