ஆர்.எம்.வீரப்பனுக்கு கொரோனா!

Published On:

| By srinivasan


மூத்த அரசியல் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி கொரோனா தொற்று பாதிப்பு 2,312 ஆகவும், சென்னையில் 618 ஆகவும் உள்ளது. கொரோனா பிடியில் தற்போது அரசியல் தலைவர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நாசர், அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மூத்த அரசியல் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 95 வயதான இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்.எம்.வீரப்பன் விரைவில் குணமடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில், எம்.ஜி.ஆர். கழகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான இராம.வீரப்பன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அறிந்தேன். அவர் விரைவில் முழுமையாக நலம்பெற வேண்டும் என விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.

க.சீனிவாசன் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share